தீவிரமான சூழ்நிலை நீங்கினால் பயணக்கட்டுப்பாடு தொடர்பில்14ஆம் திகதி முடிவு
தற்போதுள்ள கோவிட் பரவல் தொடர்பான தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் தீவிரமான சூழ்நிலை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே 14ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்திகளில், எதிர்வரும் 14அம் திகதியுடன் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 23 நாட்கள் ஆகின்றதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிபுணர்களின் ஆலோசனைப்படி பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டதால் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தற்போதுள்ள தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி நீக்கப்படும் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri