இன்று இரவு அமுலாகும் முடக்கம் - வர்த்தக நிலையங்களுக்கு படையெடுத்துள்ள மக்கள்
கோவிட் தொற்று நிலைமை காரணமாக நாடு இன்று இரவு முதல் முடக்கப்படுவதாக பிற்பகலளவில் அறிவிப்பு வெளியாகியது.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வர்த்தக நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் அதிலும் குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹாவில் பல இடங்களில் வாகன நெரிசல் அதிகமாகியுள்ளதை காண முடிகிறது.
அத்துடன் அரிசி மற்றும் எரிபொருள் கொள்வனவிற்காக நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நகை அடகு வைக்கும் நிலைங்களுக்கும் மக்கள் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன் மதுக்கடைகளின் முன்னாலும் பெருமளவானோர் குவிந்துள்ளனர்.

