பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ, நாளையோ விதிக்கப்படும்! விரைவில் முடிவு என தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய பயணக்கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் நோயாளிகளின் விரைவான அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் இறப்புக்களுடன் நாட்டின் சுகாதார அமைப்பு சோர்வடையும் விளிம்பில் இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்க சுகாதார நிபுணர்கள் தங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்த அழிவு டெல்டா வகையால் ஏற்பட்டதாக நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உடனடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இறப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200ஐத் தாண்டும் மற்றும் தினமும் 5000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று முன்னணியில் உள்ள மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
டெல்டா மாறுபாட்டை எதிர்கொள்ளும் சில நாடுகள், முடக்கல்களை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
