கஜேந்திரகுமார் மீதான கொலை முயற்சி! நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்வி(Video)
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கி முனையில் வைத்து அச்சுறுத்தியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.06.2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,யாழ்ப்பாணம்-மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது புலனாய்வாளர்கள் அவரை துப்பாக்கி முனையில் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பயணதடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் மீது தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
ஆனால் அந்த புலனாய்வாளர்கள் மீதும் சந்தேகநபர்கள் மீதும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லையே இதுதான் ஜனநாயகமாக.”என கேள்வி எழுப்பியுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)