பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
குறித்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை தொடர்பானதாகும். அதாவது, ஜேர்மனி புலம்பெயர்வோரை போலந்து நாட்டுக்குள் அனுமதிப்பதாக வலதுசாரி அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஆகவே, போலந்தை ஆளும் வலதுசாரி அரசு, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் அமைந்துள்ள 52 இடங்கள் மற்றும் லிதுவேனியா எல்லையிலுள்ள 13 இடங்களில் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புச் சோதனைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே, ஜேர்மனி தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஆக, இந்த மூன்று நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதனால், இந்த மூன்று நாடுகளுக்கும் செல்லும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில், இந்த நாடுகளுக்குச் செல்லும்போது, எல்லைகளில் உங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் பிரித்தானியர்கள் அதிக அளவில் சுற்றுலாவுக்காக செல்கின்றார்கள்.
சுற்றுலா செல்பவர்கள்
லிதுவேனியாவுக்கு, ஆண்டுக்கு சராசரியாக 83,000 பிரித்தானியர்களும், போலந்துக்கு 600,000 பேரும் சுற்றுலா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியைப் பொருத்த வரையிலோ, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி சுற்றுலா சென்ற பிரித்தானியர்கள் எண்ணிக்கை 5.3 மில்லியன் என கணிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பிரித்தானியர்கள் அண்மைய பயண ஆலோசனைகள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்வதுடன், இந்த நாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்புச் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அதற்கு தயாராக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
