இலங்கை உயர்ஸ்தானிகரக மேன்முறையீட்டை ஏற்ற சென்னை மேல் நீதிமன்றம்
சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் ஊழியரான இந்திய பிரஜை ஒருவரை, மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.
இலங்கை துணை உயர்ஸ்தானிகரம் தாக்கல் செய்த மேன்முறையீட்டின், அடிப்படையில் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தில், உதவியாளராக, டி. செந்தில்குமாரி என்பவர் பணியாற்றினார்.
இராஜதந்திர விலக்குரிமை
எனினும், தாம் தவறான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், எனவே மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த தனி நீதிபதி, மீண்டும் அவரை பணிக்கு அமர்த்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டது.
அத்துடன், இந்தியாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு அமைப்புகள், இந்த தொழில் சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்றும், இந்திய தொழிலாளர் விதிமுறைகளை மீறுவதற்கு இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த முடியாது என்றும் தனி நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தது.
உத்தரவு இடைநிறுத்தம்
இருப்பினும், அவர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும், அந்த ஒப்பந்தம் முடிவடைந்தாகவும் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் மேன்முறையீட்டை செய்தது.
தனி நீதிபதியின் வியாக்கியானங்களையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே, சென்னை மேல் நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 12 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
