இலஞ்சம் பெற்ற போக்குவரத்து அதிகாரி கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தோலுகமவில் இருந்து கொழும்பு நோக்கி (பாதை இலக்கம் 188) இயங்கும் தனியார் பேருந்து ஒன்றை, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தை விட தாமதமாகப் புறப்பட அனுமதிப்பதற்கும், சாதகமான பயண ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கு 100 ரூபாய் லஞ்சம் கோரிப் பெற்ற போக்குவரத்துச் சபை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட கால அட்டவணை அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
குறிப்பிட்ட பேருந்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri