முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் (Video)

Mullaitivu Strike Sri Lanka Northern Province of Sri Lanka
By Shan Dec 13, 2023 08:20 AM GMT
Report

முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று மாலை தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருசதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் நேற்றையதினம் (12.12.2023) இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், இ.போ.ச. சாரதி மீதும் பேருந்து நடத்துனர் மீதும் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்து முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவை இன்று இடம்பெறாது என வடமாகாண தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் தென்னை முக்கோண வலய செயற்திட்டம்

கிளிநொச்சியில் தென்னை முக்கோண வலய செயற்திட்டம்


இந்த தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேருந்தின் நடத்துனர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வடமாகாண தொழிற்சங்கம் ஆதரவு

இந்நிலையில் உரிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்படாமையே தங்களது இந்த முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் (Video) | Transport Board Employees Strike In Mullaitivu

இந்த போராட்டத்தில், தனியார் பேருந்து குழுவினரால் தாக்கப்பட்ட எமது நடத்துனருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் நேர அட்டவணை பங்கீட்டு நியதிச்சட்டத்தின் அடிப்படையில் 60 : 40 என்ற விகிதத்தில் நேர அட்டவணை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இ.போ.ச. ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

நிரந்தர தீர்வு

சாலை பிரதான நுழைவாயில் கதவில் மக்களுக்கு சேவை செய்வது என்ன பிழையா? நேரம் என்ன எங்களுக்கு தடையா?, முல்லைத்தீவு - கொக்கிளாய் 36 KMக்கான இ.போ.சபை கட்டணம் 203 ரூபாய், தனியார் கட்டணம் 250 ரூபாய் மற்றும் வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையாற்றும் முல்லைத்தீவு தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


இதேவேளை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமக்கான நிரந்தர தீர்வாக 60 : 40 என்ற விகிதத்தில் உரிய வகையில் நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்காமல் தங்களது போராட்டம் நிறுத்தப்படமாட்டாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு

அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு

திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி! இலங்கை தொடர்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு (Video)

திடீரென சபைக்கு வந்த ஜனாதிபதி! இலங்கை தொடர்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US