அமைச்சரவையில் எரிபொருள் மற்றும் மின்சார மோசடியாளர்கள்: அனுரகுமார கடுமையாக சாடல் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதியின் அமைச்சரவையில் தான் எரிபொருள், மின்சார கொள்வனவு மோசடியாளர்கள் உள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஊழல் மோசடிகளை கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி செயற்படுகிறார். மாத்தறை மாவட்டத்தின் ஆதரவு அவருக்கு முக்கியம் என்பதால் ஊழலுக்கு கதவுகளை திறந்துள்ளார்.
1987ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 120 பில்லியன் ரூபாவை மாத்திரம் நேரடி முதலீட்டை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை காட்டிலும் குறுகிய
காலப்பகுதிக்குள் பல பில்லியனை நேரடியான முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு