மாவீரர் நாள் நிகழ்வுகளை குழப்பும் இலங்கை அரசு: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை அரசு குழப்புவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் நாளை நினைவு கூருவதற்கான ஆயத்தப் பணிகளை செய்த தமது பிள்ளைகளை இழந்த உறவுகளையும், பொதுமக்களையும் மற்றும் முன்னாள் போராளிகளை கைது செய்தமை.
சிங்களப் பேரினவாத அரசு
மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்களை தகர்த்து அழித்தமையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
சர்வதேச நியதிப்படி இறந்வர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு சிங்களப் பேரினவாத அரசு மீண்டும், மீண்டும் தனது கோரமுகத்தைக் காட்டி நிற்கின்றது.
உடனடியாக மாவீரரர்களை நினைவு கூருதலை எந்தத் தடைகளுமின்றி நினைவு, கூர சர்வதேசம் உடனடியாக அழுத்தம் கொடுக்கவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |