உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் பலரின் இடமாற்றங்கள் இரத்து
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் பலரின் இடமாற்றங்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.
இது குறித்த கோரிக்கையை பொலிஸ் ஆணைக்குழுவிடம் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ளார்.
இதன்படி, இன்று (01) நடைபெற்ற பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இடமாற்றங்கள் இரத்து
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த , சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடிதுவக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அசோக தர்மசேன ஆகியோரின் இடமாற்றங்களும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், இரண்டு பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் பெண் பொலிஸ் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினரின் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை! பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு