கொழும்பில் மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட பொதி! சிக்கிய ஆபத்தான பொருட்கள்
கொழும்பு - அகுலான மயானத்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே இரண்டு கையெறி குண்டுகளும், தோட்டாக்கள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகுலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகுலான வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மயானத்தில், குப்பைத் தொட்டி அருகே சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
அகுலான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் பண்டாரா உள்ளிட்ட அதிகாரிகள் குழு, 30 ஆம் திகதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இதனை கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து பொதியை திறந்து சோதனையிட்டபோது, அதற்குள் 2 கையெறி குண்டுகள், 25 சிறிய ரக தோட்டாக்கள் மற்றும் ஒரு ஏ.கே ரக தோட்டா ஆகியவை இருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam