புகையிரதங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என குற்றச்சாட்டுக்கு சீன நிறுவனத்தின் பதில்
சீனத் தயாரிப்பிலான புகையிரத வண்டிகள் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்ற புகையிரத சாரதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து சீன நிறுவனம் பதிலளித்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த புகையிரதங்கள் 2008ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்பட்டன.
இந்த நிலையில் 12 வருட உத்தரவாத காலத்திற்குப் பிறகு, அவை சாதாரண செயற்பாட்டிற்காக இலங்கை புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
12 வருடங்களுக்கும் மேலாக, தடையாளி, இணைப்பு மற்றும் இடையக சாதனம் ஆகியவற்றை இப்போது அவசரமாக மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு என்பன அவசியமாகின்றன.
எனவே இந்த பராமரிப்பு தொடர்பில் இலங்கை புகையிரத திணைக்களத்துன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
