அம்பாறையில் நடைபெற்ற தபால் மூல வாக்குச் சான்றிதழ் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம்
ஜனாதிபதி தேர்தல் 2024 தபால் மூல வாக்குச் சான்றிதழ் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் அம்பாறை(Ampara) மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையானது அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
அரச நிறுவன அதிகாரிகள்
இதன் போது அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் 186 சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் , மற்றும் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள், இராணுவம், பொலிஸ், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அனைத்து அரச நிறுவன அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேற்குறித்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
