மன்னார் மீது செல்வம் எம்.பிக்கு வந்த திடீர் அக்கறை! வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ஐபிசி தமிழ்
அண்மையில் வெளியான ஐபிசியின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி செல்வம் அடைக்கலநாதனின் குரல் பதிவு விவகாரம் தொடர்பான உண்மைத் தன்மையை நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்து இருந்தார்.
அத்தோடு, மன்னார் வைத்தியசாலையிலே தீர்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும், மன்னாரில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
மேலும் ,இது தொடர்பான விரிவான விடயங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,