கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கள விஜயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை வெளிகண்டல் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கள விஜயத்தை, இன்றையதினம் (15.11.2025) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் கண்டாவளை பிரவேச செயலாளர் பிருந்தாகரன் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இரவு வேளைகளில் கண்டாவளை ஆற்றில் சட்ட விரோதமான முறையில், அப்பகுதியில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் காணப்படுகின்ற மணல் பல அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.

சந்தேகநபர்கள் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, நேற்றிரவு டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரமும் சிறப்பு அதிரடிப்படையிறால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


