இலங்கையின் அரச பணியாளர்களுக்காக இந்தியாவில் நடத்தப்பட்ட பயிற்சித்திட்டம்
இலங்கையின் (Sri Lanka) மூத்த அரசு ஊழியர்களுக்கான 3ஆவது திறன் மேம்பாட்டு திட்டம் இந்திய (India) புதுடில்லியின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (National Centre for Good Governance) (NCGG) நிறைவடைந்துள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த 41 மூத்த அரச அதிகாரிகள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி செயலாளர்கள்,இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்படி இலங்கையிலிருந்து மொத்தமாக 95 அரச பணியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள்
இலங்கை அதிகாரிகளுக்கான இந்த பயிற்சியில், குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு, டிஜிட்டல மாற்றத்தில்; இந்தியாவின் முயற்சிகள் என்பன குறித்து பயிற்சிகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இந்திய நிர்வாக மாதிரிகளிலிருந்து இலங்கை அதிகாரிகள் கற்றுக்கொள்ள உதவும் திட்டங்கள் குறித்தும் பயிற்சியின்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |