திருகோணமலையில் மாணவர்களுக்கு கருத்தரங்கு
அறிவு ஒளி மையத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் மனநிலையுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுய-மதிப்பீட்டுப் பயிற்சி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்ட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கருத்தரங்கு நேற்று (16.06.2024) திருகோணமலை நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருகோணமலை செயலாளர் இராஜசேகர் நகர சபையினது சேவை மற்றும் அதனோடு இணைந்து மக்களது பங்கு இளைய சமுதாயத்தின் தேவை என்பனவற்றை எடுத்துரைத்தார்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு
இந்த கருத்தாக்க நிகழ்வினை வழிநடத்தி தந்த வளவாளர் கணேஷ், சிறப்பான முறையில் மாணவர்களது விருத்தியை மேல்நோக்கும் விதமாக நிகழ்வை வழிநடத்தினார்.
இந்த நிகழ்வின் இறுதியில் அறிவு ஒளி மைய பணிப்பாளர் உதயகுமார் அஜித் குமார், மாணவர்களது தேவைகள் சிலவற்றை அடுத்து வரும் மாணவர் மன்றக் கூட்டத்தில் செய்து தருவதாக உறுதியளித்தார்.
மேலும், இந்த நிகழ்வை முழுவதுமாக அறிவு ஒளி மையத்தின் நிர்வாகச் செயலாளர் டிலக்சிகா புகழ்வேந்தன் ஒழுங்கமைத்து தந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |