இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும் போது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அட்டையை கோரும் உரிமை பொது மக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள்
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவாமுல்ல சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொருட்கள் மீள வேண்டுமென்றால் 35 ஆயிரம் ரூபாயுடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை
இது தொடர்பான முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸாரின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
