மட்டக்களப்பில் சக மாணவியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மாணவன் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் தரம் 11இல் கல்விகற்றுவரும் 16 வயது மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய அதே தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு நேற்று (27.09.2024) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காதல் உறவு
பாதிப்புக்கு உள்ளான மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்புக்காக சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன், பக்கத்து வீட்டு மாணவியுடன் பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்திய பரிசோதனை
இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக மாணவி சென்று வந்துள்ள நிலையில், மாணவியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு மாணவியை நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் மாணவி 2 மாத கர்ப்பிணியாகியுள்ளமை குறித்து வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        