பயணச்சீட்டு இன்றி தொடருந்து பயணம்! நான்கு இலட்சம் ரூபா வருமானம்
பயணச்சீட்டு இன்றி தொடருந்துகளில் பயணித்தவர்களிடம் இருந்து கொம்பனித்தெரு தொடருந்து நிலையம் நான்கு இலட்சம் ரூபா அபராதம் அறவிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி தொடக்கம் கொம்பனித்தெரு தொடருந்து நிலையத்தின் நீதியரசர் அக்பர் மாவத்தை பக்கமாக அமைந்துள்ள தொடருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் வழியில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகை
இதன்போது பயணச்சீட்டு இன்றி தொடருந்துகளில் பயணித்த 129 பயணிகள் மடக்கி பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து நான்கு இலட்சத்து இரண்டாயித்து இருநூறு ரூபா அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு தொடருந்து நிலையத்தின் மற்றுமொரு வெளியேற்ற பாதையான உத்தரானந்த மாவத்தை வாயில் மூலமாக வெளியேறும் பயணிகளை பரிசோதனைக்குட்படுத்த ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் அங்கு பயணச்சீட்டு பரிசோதனை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
பொருளாதார நெருக்கடி
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பொதுமக்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.