ரயில் பயணங்களை மேற்கொள்வோருக்கு முக்கிய தகவல்
ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஒன்லைன் முறையில் ரயில் டிக்கட்டுகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு அல்லது ரயில் இருக்கையை முன்பதிவு செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செயலிகளை எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இன்று இந்த வசதி அமுல்படுத்தப்படுவதாகவும் எதிர்காலத்தில் ரயில் பயணிகளின் தேவைக்கேற்ப இந்த வசதி மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.




