தொடருந்து பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
தொடருந்து பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த நிலையில் குறித்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தை திணைக்களத்தின் வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.
தென் பகுதி தொடருந்து பாதையில் பயணச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்தப்படாத தொடருந்து பயண சீட்டு
எனவே பயன்படுத்தப்படாத தொடருந்து பயண சீட்டுக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான அதியுச்ச காலம் 14 நாட்களாக இருந்த நிலையில் தற்போது, அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
