சீரற்ற காலநிலையால் மலையக ரயில் சேவைகளுக்கு தடை
சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதைகளில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறுவதாக இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும் மலையக ரயில் பாதைக்கு அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்கள் வெள்ளம், நிலச்சரிவு, பெரிய பாறை சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் பாதைகளை சீரமைக்க பல நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை - பதுளை பிரதான பாதையில் ரம்புக்கணை மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, கடிகமுவ ரயில் நிலையத்தின் ஒரு பகுதியும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இஹல கோட்டே மற்றும் பலான ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையின் பல பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நிரம்பி வழிவதால் மதுரங்குளிய உப நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்வே பாதையும் பங்கதெனிய ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
