அலுவலக புகையிர சேவை வழமை போல் ஆரம்பம்
அலுவலக புகையிரத சேவை இன்று காலை 6 மணிக்குப் பின்னர் வழமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் ஊழியர்களை அழைத்துவர முடியாத நிலையில் காலை நேர பயணங்கள் பல இரத்து செய்யப்படலாம் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகளும் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த பேருந்து சேவைகள் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை (2) மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், முடக்கப்பட்ட பொது போக்குவரத்து சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.



