கொழும்பு - திருகோணமலைக்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்
டிட்வா சூறாவளி பேரழிவு காரணமாக நிறுத்தப்பட்ட பல தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு - திருகோணமலை இரவு அஞ்சல் தொடருந்து சேவை ஜனவரி 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை ஆரம்பம்
அத்துடன், கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் “புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” தொடருந்து 20ஆம் திகதி முதல் தினமும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு - மட்டக்களப்பு உதயதேவி எக்ஸ்பிரஸ் தொடருந்து 20ஆம் திகதி மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய அரசின் மானியத்தின் கீழ், வடக்கு தொடருந்து பாதையில் புதுப்பித்தல் பணிகள் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன் விளைவாக, இந்த காலகட்டத்தில் மஹோவிலிருந்து அனுராதபுரம் வரையிலான தொடருந்து சேவை இயக்கப்படாது என்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.