செவ்வந்தியுடன் கைதான கம்பஹா பபாவுக்கு விளக்கமறியல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கம்பஹா பபா“ எனப்படும் தினேஷ் நிஷாந்த குமாரவை ஜனவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு கூடுதல் நீதவான் பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட அவர், நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ், பேலியகொட பொலிஸார் விசாரித்து வந்தனர்.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, கொழும்பு கூடுதல் நீதவான் பிறப்பித்த உத்தரவின் கீழ், சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சந்தேக நபர் உட்பட குழுவினர் ஒக்டோபர் 15ஆம் திகதி நேபாளத்திலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam