இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

Batticaloa Kurunegala Sri Lanka Railways Train
By Vethu Jun 03, 2026 02:13 AM GMT
Report

குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக தொடருந்துடன் அது மோதவிருந்த பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எதிர்பாராத விபத்து பதிவாகியுள்ளது.

சிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ள உதய கம்மன்பிலவுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்..

சிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ள உதய கம்மன்பிலவுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்..

சிறப்பு விசாரணை

இந்த சம்பவம் குறித்து தொடருந்து திணைக்களம் தற்போது சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள் | Train Moves Without Driver Investigations Begin

மறுநாள் காலை குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இந்த தொடருந்து, வழக்கம் போல இரவு நேரத்தில் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது தொடரூந்தின் பிரேக் செயலிழந்ததால், அது எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி பொத்துஹெர திசையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியுள்ளது.

தொடருந்து நிலையத்தில் எவருமின்றி தொடரூந்து முன்னோக்கி சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பின்னரே அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

உடனடியாக செயல்பட்ட தொடருந்து நிலைய அதிபர் உள்ளிட்ட ஊழியர்கள் தொடரூந்தை நிறுத்த கடுமையாக முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்தன.

தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து

கட்டுப்பாடின்றி நகர்ந்த இந்த தொடரூந்து, குருணாகல் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள நைலிய தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மலை போன்ற மேடான பகுதியில் ஏறி தானாகவே நின்றுள்ளது.

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள் | Train Moves Without Driver Investigations Begin

அந்தச் நேரத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக தொடருந்து, பொத்துஹெர தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் குருணாகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

நிலைமையை உணர்ந்த பொத்துஹெர மற்றும் குருணாகல் தொடருந்து நிலைய அதிபர்களும், தொடருந்து திணைக்களத்தின் பிரதான செயல்பாட்டு அலுவலக அதிகாரிகளும் உடனடியாக செயல்பட்டு, தொலைபேசி மூலம் மீனகயா தொடருந்தின் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டனர்.

தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயல்பட்ட ஓட்டுநர், களனி குமாரி தொடருந்துக்கு மிக அருகில் மீனகயா தொடருந்தை நிறுத்தியுள்ளார்.

தொடருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இந்த உடனடி மற்றும் கூட்டுத் தலையீடு காரணமாகவே ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொடருந்தில் குறைந்தபட்சம் கை பிரேக் கூட போடப்பட்டிருக்கவில்லை என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா என்பது குறித்தும் தொடருந்து திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மட்டக்களப்பில் நடந்த விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் நடந்த விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

தென்னிலங்கையில் தாயின் பாதக செயல்

தென்னிலங்கையில் தாயின் பாதக செயல்

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US