தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரகும்புர - அம்பேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிடையே இன்று அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடருந்து நிலையத்தில் தொடருந்து கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து கடவையில் படுத்து உறங்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் அம்பேவெல தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
