தென்னிலங்கையில் மூவரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து: பொலிஸார் வெளியிட்ட காரணம்
களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த தொடருந்து நிலையத்தில் நேற்றிரவு (12) தொடருந்து மோதுண்டு மூவர் உயிரிழந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று (12) இரவு பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச்சென்று கொண்டிருந்த தொடருந்தில் மோதி மூவர் உயிரிழந்திருந்தனர்.
களுத்துறை - நாகொட - வெனிவெல்கெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தந்தையும் அவரது 01 வயது 10 மாத மகன் மற்றும் 49 வயதுடைய மற்றுமொருவரும் விபத்தில் உயிரிழந்திருந்தனர்.
பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
தொடருந்து நிலையத்தின் இரண்டாவது மேடையில் காத்திருந்த போது தந்தையும், மகனும் விபத்தை சந்தித்துள்ளதுடன், தடுக்க முயன்ற 49 வயதுடைய அயலவர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்திருந்தனர்.
களுத்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது உயிரிழந்த 21 வயதுடைய நபர் தற்கொலை செய்து கொள்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு குழந்தையுடன் தொடருந்து நிலையத்திற்கு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த அவர் போதைக்கு அடிமையானவர் என்றும், அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |