பூம் ட்ரக் சரிந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு..
மரக்கட்டைகள் ஏற்றிக்கொண்டிருந்த பூம் ட்ரக் ஒன்று திடீரென வீதியின் ஓரமாகச் சறுக்கி கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அதன் இயந்திர ஒப்பந்தக்காரர் அதே வாகனத்தால் மிதிபட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுப்(11) பிற்பகல் 2.30 மணியளவில் பதுளை, வெலிமடை - உடுகஹவர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தீவிர விசாரணை
உயிரிழந்த நபர் கவிழ்ந்த வாகனத்துக்கு கீழே சிக்கி அரைமணி நேரம் வரை இருந்துள்ளார்.

பின்னர் மற்றொரு பூம் ட்ரக் வாகனத்தின் உதவியுடன் கவிழ்ந்த வாகனம் தூக்கப்பட்டு, 1990 அவசர மருத்துவ சேவையின் மூலம் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam