அம்பாறையில் 18 வயது இளைஞரின் விபரீத முடிவு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (01.04.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பெரிய நீலாவணை பொலிஸார் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த மரணம் காதல் விவகாரம் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர் மேலதிக பரிசோதனைகளுக்காக கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.