பதவியேற்ற மறுநாளே உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்
கலவான பிரதேச சபை உறுப்பினராக இருந்த சுஜீவ புஷ்பகுமாரா இன்று (ஜூன் 2) திடீர் மின்சாரம் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம், புதிதாக கூட்டம் கூடிய உள்ளூராட்சி சபையின் முதல் நாளில், அவர் பதவியேற்றதற்குப் பிறகு மறுநாளான இன்று நிகழ்ந்துள்ளது.
விபத்து
இந்த விடயம் தொடர்பில் கலவானபொலிசார் தெரிவித்ததாவது,

டெல்கொடா காலனி பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த வயரின் அருகே இருந்த மரக்கிளையை அகற்ற முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சர்வஜன பலய கட்சி சார்பில் உறுப்பினராக இருந்த புஷ்பகுமாரா, விபத்து நேரம் ஒப்பந்த அடிப்படையில் மரங்களின் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி
விபத்துக்குப் பிறகு கலவான அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri