போதைப்பொருள் கடத்தல்: பெண்கள் உட்பட மூவர் கைது
ஹெரோயின் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அளுத்கமவிலிருந்து ஹெரோயினை கடத்திச்சென்று பதுளை மற்றும் பண்டாரவளைக்கு விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 1,000 ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஹாலி-எலவில் வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சகோதரிகளே, பதுளை மற்றும் பண்டாரவளையில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளனர்.

அந்த நேரத்தில், போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஹெரோயினை விநியோகம் செய்த ஒருவர் அளுத்கமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.