கிளிநொச்சி மக்களின் போக்குவரத்து பாதிப்பு(Photos)
கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட விளாவேடை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் மழை காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பிரதான பாதை பாதிப்பு
குறித்த கிராம மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான பாதையில் உள்ள பாதுகாப்பற்ற பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், மற்றும் அப் பகுதியில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் இடர்களை சந்தித்து வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் இக்
கிராம மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிப்படையலாம் என
தெரிவிக்கப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
