தென் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை செலுத்து இன்று புதிய வசதி
தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி தற்போது மேல் மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து அபராதம்
அதற்கமைய, மேல் மற்றும் தென் மாகாண மக்கள் தமது போக்குவரத்து அபராதங்களை இலகுவாக ஒன்லைனில் செலுத்த முடியும் என ஹர்ஷா புரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையை செயற்படுத்தும் வகையில் தென் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 400க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலத்தில் வட மாகாணத்திலும் இந்த நடைமுறையை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இந்த வசதியை வழங்க நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




