ஹட்டனில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு
ஹட்டன் பொலிஸ் பிரதேசத்தில் டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று (09) பாரிய பைனஸ் மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹட்டன் பலாங்கொடை, பொகவந்தலாவை ஹட்டன் - சாமிமலை, மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அத்தோடு, மரம் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதிக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகளும் மின்வாரியத்தால் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதியில் வீசிய கடுங்காற்றுக் காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச மக்கள் இணைந்து, மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குறித்த வீதியூடனான போக்குவரத்து சீரானது இதனால் பலரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.






இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri