புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்கும் இலங்கை வணிக கழகம்
வரவு செலவுத்திட்டத்தில் முன்மாதிரி திட்டங்கள் உள்ளதாக இலங்கை வணிக கழகம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தை நடுத்தர கால சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தக்கவைத்துக்கொள்வதற்கு முக்கியமான கூறுகளான கொள்கை முன்கணிப்பு, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுக்கமான கடன் முகாமைத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்துவதாக வணிக கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை வணிக கழகம் வரவேற்றுள்ளது.
முன்மாதிரி திட்டங்கள்
இந்தநிலையில், குறைந்த பணவீக்கம், நிலையான வட்டி விகிதங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றால் உருவாக்கப்படும் அபிவிருத்தி பாதையை பராமரிக்க நிலையான கொள்கைகள் அவசியம் என்றும் வணிக கழகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வணிக்கழகத்தின் அறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, வர்த்தக வசதிகளை உருவாக்கப்படும்.அத்துடன்; புதிய கட்டணக் கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மூலதன கொடுப்பனவுகளுக்கான குறைக்கப்பட்ட வரம்புகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான புதிய குடியிருப்பு விசா திட்டம் உட்பட்ட பல முன்மாதிரி திட்டங்கள், 2026 வரவு செலவுத்திட்டத்தில் உள்ளதாக வணிக கழகம் தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam