சீரற்ற காலநிலையால் முறிந்து விழுந்த மரம் - பாதிக்கப்பட்ட போக்குவரத்து வழமைக்கு
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வனராஜா பழையகாடு பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் காசல்ரீ - நோட்டன்பிரிட்ஜ் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் ஹட்டன் டிக்கோயா காசல்ரீ பிரதான வீதியில் நேற்று (11.10.2026) இரவு சுமார் 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரத்தின் கிளைகளை அகற்றும் பணி

வீதியின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பிரதேசவாசிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

சீரற்ற காலநிலை நிலவும் போது, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், சீரற்ற காலநிலையின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan