வவுனியாவில் விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிஸார்
வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா நீதிமன்றம் முன்பாக கடமையில் நிற்கும் போக்குவரத்து பொலிஸார், நீதிமன்ற நடவடிக்கைக்காக அப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகின்றனர்.
அத்துடன், தாம் நிற்கும் திசைக்கு எதிர் திசையில் வரும் வாகனங்களையும் திடீரென வீதியை குறுக்கிட்டு வாகனத்தை மறித்து அவர்களது ஆவணங்களை சோதனை செய்து வருகின்றார்.
விபத்துக்கள்
ஆவணங்களை பொலிஸார் சோதனை செய்வது சரியானதெனினும், குறித்த பகுதியில் சன நெரிசலுக்கு மத்தியில் வாகனம் செல்லும் போது திடீரென வாகனங்களை மறிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளது.

எனவே, இது தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan