முல்லைத்தீவு அளம்பிலில் பல மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து
முல்லைத்தீவு அளம்பிலிலிருந்து குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் அருகே இருந்த ஒரு பாரிய மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே விழுந்ததால் பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் இன்று (19.07.2024) அதிகாலை இடம்பெற்றது.
இந்நிலையில், அளம்பிலிலுள்ள 10வது சிங்கரெஜிமன்ட் படையணியை சேர்ந்த இராணுவத்தினரால் துப்பரவு செய்யப்பட்டு பின்னர் போக்குவரத்து மீண்டும் சீர்செய்யப்பட்டது.
காற்றுடன் கூடிய காலநிலை
மரங்களின் கிளைகள் அவ்வப்போது காற்றுக்கு முறிந்து விழுந்து கொண்டிருப்பதாகவும், பாரிய காற்று வீசும் போது மரங்களின் பெரிய கிளைகள் முறிந்து விழுமாயின் இப்பிரதான வீதியில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
தற்போது காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், இம்மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, இந்த மரங்களை அகற்றுவதற்கு மற்றும் சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
