பாரம்பரிய மருந்துகள் மூலம் கொரோனா தொற்றுநோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய மருத்துவ தயாரிப்புகள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரசாத் ஹெண்டவிதாரண இதனை தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொத்தமல்லி போன்ற பாரம்பரிய மருத்துவ பொருட்கள் கொரோனாப் பரவலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தின என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டம் ஒன்று இதுவரை இல்லாமையானது பாரிய குறைப்பாடாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
