யாழ். மாநகரசபைக்கு எதிராக பழக்கடை வியாபாரிகள் போராட்டம்
யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டம், இன்றையதினம்(06.02.2025) வியாபாரிகளின் கடை தொகுதியின் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
தங்களது கடைகளுக்கு முன்னால் அளவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வியாபாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் குடும்ப வருமானம்
தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் குறித்த வியாபாரிகள், இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக மாநகர சபையினரால் பறிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேநேரம், வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
