எதிர்காலத்தில் தேங்காயின் விலை உயரக்கூடும்: வியாபாரிகள் சுட்டிக்காட்டு
எதிர்காலத்தில் சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவாக உயரக்கூடும் என்று வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, உள்ளூர் சந்தையில் தேங்காய்கள் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளதுடன் வருடாந்த தேங்காய் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய இலங்கை தெங்கு கைத்தொழில் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது.
தேங்காய் தட்டுப்பாடு
எனினும், இது தொடர்பாக இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்பதுடன் தற்போது சில பகுதிகளில் ஒரு தேங்காய் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதற்கிடையில், தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
