மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக பால்மா விநியோகம் செய்யும் வர்த்தகர்கள்
இலங்கையில் சில மாதகாலமாக அங்கர் பால்மா வர்த்தகர்களால் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வாழைச்சேனை பிரதான வீதியில் இவ்வாறான ஒரு காட்சியை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அந்த வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் இல்லாமல் பெரும் சிரமப்பட்டு வரும் வேளையில் சில பணம் படைத்த முதலாளி வர்க்கத்தினர் அங்கர் பால்மா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கர் பால்மா பக்கெட் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வியாபார நிலையங்களில் காத்திருந்து பால் மா பக்கெட் இல்லாமல் வீடு திரும்பிச் செல்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இந்த காலகட்டத்திலும்கூட பலம் பொருந்திய முதலாளி வர்க்கத்தினர் தங்களுக்கு ஏற்றாற்போல் பால்மாவை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக வீதிகளில் வியாபாரம் செய்கின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வியாபாரிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை மக்களுக்குச்
செய்யும் ஒரு துரோகம் என தெரிவிக்கப்படுகின்றது
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri