பிரான்ஸில் தொழிற்சங்கங்களின் பணிநிறுத்தம்: நாடு முழுவதும் பாரிய போராட்டங்களுக்கு தயாராகும் மக்கள்
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதிய உயர்வு மற்றும் கல்வி நிலைமைகளை மேம்படுத்தக் கோரி இன்று ( 5.11.2026) நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும், மாணவர்களும் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தப் போராட்டங்களில் சுமார் 5 இலட்சம் முதல் 7 இலட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாரிஸில் மட்டும் 80,000 பேர் வரை திரளலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல்
குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, வரி சீர்திருத்தம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

இதனிடையே, போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 70,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மாணவர் போராட்டங்களின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரான்ஸில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.