தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனா அத்தியேட்சகராக நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தான்தோண்றித்தனமான முடிவுகளூடாகவும் வாய்மொழி துன்புறுத்தல்களாலும் வேலையை தொடர்வதற்கு பாதுகாப்பற்ற அகச்சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
[QXOLJEQ ]
பிரசவ விடுமுறை
இதன் உச்சகட்டமாக எந்தவித மனிதாபிமாணமுமின்றி தன்னுடைய கடந்தகால காழ்ப்புணர்வுகளால் பிரசவ விடுமுறையில் இருந்த வைத்திர்களை தாய் சேய் நலன்களை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியேறவும் ,இடமாற்றத்தை பெற்று செல்லவும் பணித்துள்ளார்.

இதனால் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் தொடர்ந்து வேலையை முன்னெடுத்து செல்ல முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்படி விடயங்கள மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் சமன் பதிரின அவர்கள் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் இன்று 3.7.2024 மேற்கொண்ட கள விஐயத்தின் பின்பு வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனாவை உடனடியாக மாகாண சுகாதார திணைக்களத்திற்கு மாற்றலாகுமாறு எழுத்துமுலம் தெரியப்படுத்தியும் அவர் மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் கட்டளைக்கு கீழ்படியாமல் தெடர்ந்தும் அதார வைத்தியசாலை அத்தியேட்சகர் அலுவலகத்தில் இருந்துகொண்டு வைத்தியர்கள் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி பாதுகாப்பற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதை கண்டித்து உடனடியாக வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனாவை மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றி வைத்தியசாலையில் சேவையினை வழங்க ஏதுவான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும்வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பிணர்கள் அனைவரையும் தொழிற்சங்க நடவடிக்கையாக நாளை காலை 8 மணி தொடக்கம் யாழ் பிராந்திய சுகாதார பணிமனையில் இணைக்கப்படவுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை மேற்படி தொழிற்சங்க நடவடிக்கை தொடரப்படும்” என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri