யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் உடல் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சம்பந்தனின் உடல் கொண்டு வரப்பட்டதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் உடல்
கார் மூலம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
இதன்போது சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கிற்கிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்த முடியும் இலங்கை தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடல் கொழும்பில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது உடல் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
இதன்படி, இன்று காலை முதல் மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையில் சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |