யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்

Sri Lankan Tamils Kilinochchi R. Sampanthan Rajavarothiam Sampanthan S Shritharan
By Benat Jul 03, 2024 12:05 PM GMT
Report

புதிய இணைப்பு

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் உடல் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல் அங்கு தந்தை செல்வா அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக சம்பந்தனின் உடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம் | Last Respects To Sambandhan S Body

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி நாளை காலை 10.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரையில் சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்படும் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் தமது குடும்ப சூழல் கருதி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. 

முதலாம் இணைப்பு

தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வடக்கிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சம்பந்தனின் குடும்பத்தாருடனும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள்

தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள்

ஏற்பாடுகள் தீவிரம்

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி கொழும்பு  தனியார் வைத்தியசாலையில்  வைத்து உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். 

யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம் | Last Respects To Sambandhan S Body

அதனையடுத்து, கொழும்பில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்ட்டு பின்னர் இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் இடம்பெறும்  என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கிளிநொச்சி மண்ணிலும்  சம்பந்தன் ஐயாவிற்கான இறுதி வணக்க அஞ்சலி நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவகத்திலும் நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறலாம் என  என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாணம் தழுவிய தமிழ் மக்கள் சம்பந்தன் ஐயாவிற்கு தமது அஞ்சலிகளை செலுத்த தயாராகுமாறு அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம் | Last Respects To Sambandhan S Body

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், 

உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அவரது குடும்பத்தாருடன் தான் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும்  குறிப்பிட்டார். 

இதேவேளை, இது குறித்து சம்பந்தனின் மகன்கள் மற்றும் மகளுடன் தான் கலந்துரையாடியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுத்துள்ளதாகவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு ஜனாதிபதியிடமும் ஏமாற முன்பே சம்பந்தன் காலமாகிவிட்டார் - அரியநேத்திரன்

மற்றுமொரு ஜனாதிபதியிடமும் ஏமாற முன்பே சம்பந்தன் காலமாகிவிட்டார் - அரியநேத்திரன்

சம்பந்தனின் புகழுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி

சம்பந்தனின் புகழுடலுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US