யாழில் தொழிற்சந்தை வழிகாட்டல் கண்காட்சி
வடக்கு மாகாண பிரதம செயலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்புக்கான கற்கை நெறியினை நிறைவு செய்தவர்களுக்கான தொழிற்சந்தை வழிகாட்டல் கண்காட்சி இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சியானது இன்று(21.02.2024) யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் (Jaffna Cultural Centre), வடமாகாண பிரதம செயலகத்தில் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி
இங்கு தொழில் வழிகாட்டிக்கான கருத்தரங்குகள், தொழில் வாய்ப்புக்கான வேலைகள், முதலீட்டிலான தொழில்முனைவருக்கு தொழிற்துறைகள், சுயதொழிலுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொழிற்துறையிலான சந்தர்ப்பங்களை வழங்கல், முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை வழங்கல் பற்றிய 60 கண்காட்சி கூடார தொகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கண்காட்சியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள், தொழில் துறையினை எதிர்பார்ப்பவர்கள், தொழிலில் பயிற்சிகள் பெறுனர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.